டென்மார்க்கில் வாழும் தமிழீழத் தமிழர்களான திரு மகேஸ்வரன் பொன்னம்பலம், திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் மனிதநேய நடைப்பயணம் ஒன்றை 14-10-2010 பிற்பகல் 5:00 மணியளவில் தொடங்கியுள்ளனர். இந்நடைப்பயணமானது கேர்ணிங் நகரின் நகரசபை முன்றலில் ஆரம்பித்தது. இப்பயணம் ஆரம்பித்தபோது நூற்றுக்கணக்கான மக்கள் வந்துநின்று அவர்களுக்கு உற்சாகமூட்டினர். இவர்களின் இப்பயணம் டென்மார்க்கின் தலைநகரான கொப்பனேகன் நகரசபை முன்றலில் நிறைவடையும். இவர்கள் பின்வரும் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து இம்மனிதநேய நடைப்பயணத்தை மேற்கொள்கின்றனர்.
1. இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்வதற்கு டென்மார்க் அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
2. வதைமுகாம்களில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு டென்மார்க் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. இனப்படுகொலையை மேற்கொண்ட சிறிலங்கா அரசுமீது சுயாதீன விசாரணை மேற்கொண்டு, தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க டென்மார்க் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. சுயாதீன ஊடகங்கள் தடைகளற்று இயங்க சிறிலங்கா அரசுமீது டென்மார்க் அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
5. தமிழீழ மக்களின் சுயநிர்ண உரிமையை டென்மார்க் அரசு அங்கீகரிக்க வேண்டும்.
6. 1977 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலும், 2010 ஆம் ஆண்டு டென்மார்க் வாழ் புலம்பெயர் தமிழீழ மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலும் தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைப்பதற்கு டென்மார்க் அரசு உதவவேண்டும்.
மனிதநேய நடைப்பயணம் டென்மார்க்