05-07-1993 அன்று கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் விடுத்த அறிக்கை. எனது அன்புகுரியவர்களே, கரும்புலிகள் நாளாகிய இன்றைய தினத்தில் கரும்புலி வீரர்களாகிய உங்கள் மத்;;தியில் கரும்புலிகள் பற்றி பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய தினத்தில் முழு இலங்கைத்தீவையும் அதிர வைத்த ஓர் சம்பவம் நிகழ்ந்தது. எமது விடுதலை இயக்கத்தின் முதலாவது கரும்புலி வீரன் கப்டன் மில்லர் ஓர் ஒப்பற்ற சாதனையை நிலைநாட்டினான். எமது வீரவரலாற்றில் என்றுமே நிகழாத ஓர் அதிசயம் ஒன்று அன்று நிகழ்ந்;தது. எதிரியின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த ஓர் இராணுவ முகாமை இந்த இளம்புலிவீரன் தனித்த ஒருவனாகச் சென்று தகர்த்தெறிந்தான். ஒரு பெரிய படையணியாலும் செய்ய முடியாத பாரிய இராணுவ சாதனையை தனிமனிதனாகச் சென்று இவன் சாதித்து முடித்தான். தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை தழுவிக்கொள்ளும் ஒவ்வொருவனும் முதலில் தன்னை விடுதலை செய்து கொள்ளவேண்டும். தனது மனவுலக ஆசைகளிலிருந்தும் அச்சங்களிலிருந்தும் தன்னை விடுதலை செய்து கொள்பவன்தான் உண்மையில் விடுதலைவீரன் என்ற தகமையைப் பெற முடியும். மனமானது பயங்களிலிருந்து விடுதலை பெறும்போதுதான் வீரம் தோன்றுகிறது. துணிவு பிறக்கிறது. இந்த மனவியல் உண்மையை நான் ஆரம்பத்தில் இருந்து எமது போராளிகளுக்கு எடுத்துரைத்து வருகிறேன். பயம் என்பது பலவினத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதிக்கு எதிரி. மனித பயங்களுக்கு எல்லாம் முலமானது மரணபயம். இந்த மரணபயத்தைக் கொன்றுவிடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகிறான். கரும்புலிகள் பயத்தின் வேர்களைப் பிடுங்கி எறிந்தவர்கள். சாவு அவர்களிடம் சரணடைந்து விடுகிறது. மரணத்தின் நாளை அவர்கள் எதிர்பாத்து காத்திருப்பார்கள். சாவு பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. தம்மை அழிக்கும் அந்த இறுதி கணத்திலும் தம் இலக்கை அழிக்கும் நோக்கிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பர். இலட்சிய உறுதியில் அவர்கள் இரும்பு மனிதர்கள். கரும்புலி என்ற சொற்பதத்தில் கருமையை மனோதிடத்திற்கும், உறுதிபாட்டிற்குமே நாம் குறிப்பிடுகிறோம்.இன்னொரு அர்த்த பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்குப் புலப்படாத ஊடகமான இரகசியமான தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிற்கும். எனவே 'கரும்புலி" என்ற சொல் பல அர்த்தங்களைக் குறிக்கும் ஆழமான படிவமாக அமையப் பெற்றிருக்கிறது. இந்த இரகசியத்தன்மை கரும்புலி வெற்றிக்கு மூலாதரமானது. ஆளுக்கும் பெயருக்கும் அப்பால், அந்த தனிமனித தத்துவத்துக்கு அப்பால், செயற்ப்பாடே இங்கு முதன்மை பெறுகின்றது. மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே ஒரு போராட்ட வரலாற்றின் சக்கரத்தை சூழற்றுகிறது. பல கரும்புலிவீரர்கள் இன்று பெயர் குறிப்பிடாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும். முகத்தை மறைத்து, பெயரையும் புகழையும் வெறுத்து இலட்சிய மூச்சாக தமிழீழ விடுதலைக் காற்றுடன் கலந்துவிட்ட இந்த சரித்திர நாயகர்களை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். மனித தியாகத்தின் இமயத்தைத் தொட்டுவிட்ட இந்த இனிமையானவர்களை நான் அறிவேன். அவர்களது நெஞ்சத்தின் பசுமையில் ஊற்றெடுத்த உணர்வுகளையும் நான் புரிவேன். ஏதோ ஒன்று மனித விடிவை நோக்கி நகரும் உந்து சக்தியாக அவர்களை ஆட்கொண்டிருந்தது. அந்த விடுதலையின் தாகத்தை தீர்க்க எதையும் செய்வதற்க்கு அவர்கள் தயாராக இருந்தார்கள். அவர்களை அரவணைத்து விடையளிக்கும்போது இனம் புரியாத உணர்வுகளால் என் ஆன்மா நடு;ங்கும். ஒரு புனித யாத்திரையில் அவர்கள் போனார்கள். கண்ணீர் வடித்து நிற்கும் எமது தேச மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு கிடைக்கும் என்ற அசையாத நம்பிக்கையில் அந்த தியாகப் பயணத்தை தொடர்ந்தார்கள். அந்த புனிதர்களை எண்ணும் பொழுதெல்லாம் எனது நெஞ்சு புல்லரி;க்கும். கரும்புலி வீரர்கள் பற்றி இன்று உலகமெல்லாம் பேசுகிறது. அவர்களது மகத்தான தியாகத்தை கண்டு மலைத்துப் போய் நிக்கிறது. ப+கம்ப அதிர்வாக குமுறும் எமது போராட்டத்தின் உக்கிரத்தை உலக சமுதாயற்கு உணர்த்தியவர்கள் கரும்புலிகளே. அன்றோரு காலம் அமைதி வழியில் உரிமை கேட்டு ஆர்பரித்த தமிழினத்தை அடக்குமுறையாளனின் இரும்புக்கரங்கள் நசுக்கி விட்டன. இன்று நீதிகேட்டு நெருப்பாக எரியும் தமிழரின் ஆவேச எழுச்சியை எந்தச் சக்திகளாலும் நசுக்கிவிடமுடியாது. 'இது கரும்புலிகளின் சகாப்தம்" இடியும் மின்னலுமாக விடுதலைப் புலிகள் போர்க்கோலம் கொண்டுவிட்ட காலம். இந்தப் புதிய யுகத்தில் எமது போராட்டம் புதிய பரிமாணங்களில் விரியும் சாவுக்கு விலங்கிட்ட மறவர்கள் புதிய சரித்திரம் படைப்பார்கள். எமது சந்ததியின் விடிவுக்கு விளக்கேற்றி வைப்பார்கள். கரும்புலிகளின் புனித தினமாகிய இன்றைய நாளில் வரைபடாத சித்திரங்களாகவும் எழுதப்படாத சரித்திரங்களாகவும் எமது வாழ்வுக்காக தமது வாழ்வைத் துறந்த அந்த அற்புதமான தியாகிகளை எமது நெஞ்சில் நிறுத்தி ப+சிப்போமாக. 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
|