jhlj

 

 

 

 

k.JPG (3762 bytes)

 

 

 

 

 

 

 





எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்.

'நீங்கள் முன்னால் போங்கோ. நான்
பின்னால் வருவேன்"

கரும்புலியாக செல்லுகின்ற
கரும்புலிவீரர்களுக்கு, தலைவர்
அவர்கள் கடைசியாக இப்படிச்
சொல்லித்தான் வழியனுப்பிவைப்பார்
இது வெறுமனே அவரது வாயில் இருந்;து வருகின்;ற
வார்த்தை அல்ல. அந்த மாபெரும் தலைவரின்
ஆத்மாவில் இருந்து எழும் குரல் அது.
உண்மையிலே என்;றோ ஒருநாள் இதுதான் நடக்கும்" என்று
உறுதியோடு தன்னுள் சொல்;லி நிற்பவர் எம் தலைவர். கரும்புலி
நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளச் செல்கின்ற எங்கள் தேசத்தின்
குழந்;தைகள் அதற்கு போவதற்கு முன்னதாக ஒரு நாளில், தலைவர் தனது பொழுதுகளை அவர்களுடன் கழி;ப்பார். இதனை அவர் எப்போதும் செய்வதுண்டு.
கரும்புலியாக செல்பவர்கள் தமது மனம் திறந்து பழகுவார்கள். எல்லாவற்றையும் பற்றி கதைப்பார்கள். பகிடிகள் சொல்லிச் சொல்லிச் சிரித்து மகிழ்வார்கள். தலைவரோடு ஒன்றாக இருந்து உணவருந்துவார்கள். அவரோடு சேர்ந்து நின்று படமெடுப்;பார்கள். தங்களது உள்ளக்கிடக்கைகளை எல்லாம்- உணர்வுகனை எல்லாம் பகிர்ந்து கொள்வார்கள்.
கடைசியில் தலைவரிடமிருந்து அவர்கள் விடை பெறுகின்ற போது சோகம் கலந்;;த பெருமிதத்தோடு அவர்களை கட்டியணைத்து வழியணுப்பி வைக்கையில், அந்தத் தலைவனின் குரல் உறுதியோடு ஒலிக்கும்.
' நீங்கள் முன்னால போங்கோ, நான் பின்னால வருவன் "

 

 

Back