இலட்சிய வேங்கைகள்
இறப்பதும் இல்லை!
விடுதலைப் புலிகள்
வீழ்வதும் இல்லை
!


தமிழீழ தேசியக்கோடி

தமிழீழ தேசியகீதம்


பிரதான பக்கம்

தொடர்புகளுக்கு
தமிழர்
ஒருங்கினைப்பு
குழு
டென்மார்க்
புத்தகங்கள்

Eela Kadhavukal
ஈழக்கதவுகள்

Eelam Mudivillap Payanathil Mudiyatha Varalaru
ஈழம் முடிவில்லாப்
பயணத்தில் முடியாத
வரலாறு

Ezha Mannil Inthiyach Sirai
ஈழ மண்ணில் இந்திய
சிறை

Maveerar Naal Uraikkal - Neerkanalkkal
மாவீரர் நாள் உரைகள்
நேர்காணல்கள்

Mellai Kadalil Eezhakkatru
மேலை கடலில்
ஈழக்காற்று

Veelumun Sila Varikal
விழுமுன் சில வரிகள்http://foto.tamileelam.dk/#10
2009 மே மாதம் 18 நாளே சிங்கள பேரினவாதம் செய்த இனவழிப்பின் உச்சக்கட்டமான நாளாகும.; பயங்கரவாதம் என்ற போர்வையில் உலகவல்லரசுகளின் துணையுடன் தமிழினவழிப்பை நடாத்தி தமிழர்களின் தாயக நிலத்தை அபகரித்த நாளே மே18. எமது உயிரினும் மேலானா தாயக பூமியில் சிங்களபேரினவாதம் மிகவும் திமிருடன் மிகவேகமாக சிங்கள குடியேற்றங்களை நடாத்தி, தமிழர் நிலப்பரப்பில் எமது கலாச்சார, பண்பாட்டு சின்னங்களை அழித்தும் பௌத்த சிலைகளை நிரூபியும், சிங்கள பெயர் மாற்றங்களை செய்தும் முழுமையாக எமது தாயக பூமியை ஆக்கிரமித்து வருகின்றன. இதை தடுப்பதர்க்கான மாபெரும் சக்தியாக டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் ஒற்றுமையே திகழ்கின்றது. ஆகையால் 17.05.2013 வெள்ளி அன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் உணர்வுபூர்வமாக கலந்துகொள்ள வேண்டியது எமது கடமையாகும். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

எங்கள் இனத்தை அழிப்பவன் சுதந்திரமாக திரியமுடியாது

டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் விடும் அவசர வேண்டுகோள்

அன்பான தமிழினமே திரும்பிப்பார்.
ராஜபக்சவின் கோத்துக்குண்டுகளாலும் எறிகணைகளாலும் எரிக்கப்பட்டு வெடித்துச்சிதறி குற்றுயிராயிருந்துகொண்டு ஜயோ எங்களைக்காப்பாற்றுங்கோவென்று கதறிய எம்மக்களின் ஓசைகள் இன்னும் எம்மைவிட்டுப்போகவில்லையே. கை கால் உடலெங்கும் கட்டுகள் போட்டபடி பதுங்கு குழிகளிங்குள் இருந்து வெளியே வரமுடியாத எம்மக்களை உயிருடன் இறுமாப்புடன் புதைத்தவன் வருகின்றான்.

இன்றும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை திறந்த வெயிச்சிறைச்சாலைகளிலும் இரகசிய சிறைச்சாலைகளிலும் அடைத்து வைத்து சித்திரவதை செய்யும் கொடிய இனவொழிப்பாளன் வருகின்றான்.

எமது இனத்தை அழித்தவன் சுதந்திரமாக எமது அனுமதியின்றி திரியவிடலாமா?. இல்லையே. இந்த சிங்கள வெறியன் ரோசமுள்ள தமிழனுள்ள எந்தவொரு நாட்டிற்கு போனாலும் அவனுக்கு நிம்மதியே இருக்கக்கூடாது.

தமிழினமே எழுந்து வா. வீரத்தமிழினத்தின் விவேகத்தை எடுத்துக்காட்டுவோம். எழுந்து வா ராஜபக்ச கொலையாளியென்ற கோசம் லண்டனை அதிர வைக்க ஓடி வா. இனி சிந்திப்பதற்கு நேரமில்லை. சேயற்பாடொன்றே பயனளிக்கும்.
டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்


 

போர்க்குற்றவியல் நாள் மே18

http://foto.tamileelam.dk/#9

2009ம் ஆண்டு சிங்களப் பேரரசால் தமிழ் மக்கள் மீது கொடுரமான இனப்படுகொலை
செய்யப்பட்ட பேரவலத்தின் 3 வது நினைவு நாளான போர்க்குற்றவியல்
நாள் மே18 வெள்ளிக் கிழமையன்று 18-05-12 டென்மார்க்கில்
(பிலுன்ட்)Billund(ஸ்ருவர்) Stuer (ஈ)Ikast,(கேர்ணிங்)
Herning,(நியூபோ) Nyborg,(ஓகூஸ்) Århus நகரில்
உள்ள தமிழ் மக்களால் கவனயீர்ப்புப் பேரணி நடாதப்பட்டன.
தீப்பந்தங்களுடன் திரளாக கலந்து கொண்ட மக்கள் அனைவரும்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்த உறவுகளின் படங்களுக்கு
சுடரேற்றி வணக்கம் செலுத்தினார்கள்.உணர்வுபுர்வமாக நடைபெற்றுக்
கொண்டிருந்த இந்நிகழ்விற்கு பல டெனிஸ் மக்களும் வந்து சுடரேற்றி
வணக்கம் செலுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது. இதை பல டெனிஸ்
ஊடகங்கள் இந்த கவனயீர்ப்பை முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.
ஆலயங்களிலும் நெய்விளக்கேற்றி உயிரிழந்த மக்களின் ஆத்மசாந்திப்
பிரார்த்தனைகளும் நடாத்தப்பட்டன.

தேசத்தின் மயில்கள்2012
டென்மார்க்

http://foto.tamileelam.dk/#8
டென்மார்க்கில் 24-03-2012 அன்று தேசத்தின்மயில்கள் என்ற எழுச்சிநடனப்போட்டி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு வழமையான நிகழ்வுகளான மங்களவிளக்கேற்றல், அகவணக்கம் போன்றவற்றுடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் மாவீரரை சிறப்பிக்கும்வயலின் இசை இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல சிறப்பு நடனங்கள், போட்டிநடனங்கள், சிறப்புரை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

போட்டி நடனங்கள் 16 வயதிற்குட்பட்டோர்,16 வயதிற்கு மேற்பட்டோர் எனப்பிரித்து நடைபெற்றன.

16 வயதிற்குட்பட்டோருக்கான குழுநடனப்போட்டியில் முதலாவது இடத்தை ஸ்ரூவர் (ளுவசரநச) நகர மாணவர்களும் இரண்டாவது இடத்தை ஈகாஸ்ட் (ஐமயளவ) நகர மணவர்களும் மூன்றாவது இடத்தை ஓகூஸ் (யுயசாரள) நகர மாணவர்களும் பெற்றனர்.

16 வயதிற்குமேற்பட்டோருக்கான தனி நடனப்போட்டியில் முதலாவது இடத்தை சிருஞ்சயன் யோகராசா (கேர்ணிங், ர்நசniபெ) அவர்களும் இரண்டாவது இடத்தைவிதுசா யோகஞானம் ( ஸ்கெயான் - ளுமதநசn) அவர்களும்பெற்றனர்.

16 வயதிற்குமேற்பட்டோருக்கான குழுநடனப்போட்டியில் முதலாவது இடத்தை கேர்ணிங் - ர்நசniபெமாணவர்கள் பெற்றனர்.

தேசத்தின் மயில்கள்2012 சுற்றுக்கிண்ணத்தை ர்நசniபெ மாணவர்கள்பெற்றனர்

இப்போட்டியில்கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டுமதிப்பளிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வுநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் நிறைவுக்கு வந்தது.


18வது நாளைத் கடந்து வலிந்து நடக்கும் கால்களுடன் வலிமையுடன் தொடர்கின்ற​து நீதிக்கான நடைப்பயணம்​

இலங்கைத்தீவில்சிங்களப் பேரினவாதத்தால் அடிமைகளாக்கப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும்தமிழினத்திற்கு நிரந்தரமானதும் நிம்மதியானதுமான வாழ்வுக்கு சர்வதேச சமூகம்வழிசமைக்க வேண்டும் என்று நீதி கோரி 18 நாட்களைக் கடந்து எழுச்சி வலுப்பெற நடைப்பயணம்தொடர்கின்றது.


Mühlhausenஅருகாமையில் தொடர்ந்துகொண்டிருக்கும்நடைப்பயணம் ஐரோப்பிய வடகடலையும் சுவிஸையும் இணைக்கும் Rain நதி ஓரமாக நகர்ந்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுவிஸை சென்றடையும்என எதிர்பார்க்கப்படுகிறது. நடைப்பயணத்தை தொடர் எழுச்சியுடன் ஜெனிவா வரை அழைத்துச்செல்வதற்கு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

 

தமிழர்களின்வெளியக வெகுயனப் போராட்டங்களினதும் உள்ளக இராயதந்திர நகர்வுகளினதும் அறுவடையாகவேஇலங்கை 19 மே 2009 க்குப் பின்மிகப்பெரும் சர்வதேச அழுத்தம் ஒன்றுக்குள் தற்பொழுது சிக்கியுள்ளது. இச் சமயத்தில்உலகத் தமிழர்களின் உணர்வுகளை மீண்டும் சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்என்பதை உணர்ந்து அனைவரையும் மார்ச் 5ம் திகதி ஐநாமுன்றலுக்கு வருமாறுகேட்டுக்கொள்கிறார்கள் நடைப்பயணத்தை மேற்கொள்ளும் உணர்வாளர்கள்.

 

அத்துடன்நடைப்பயணத்தை மேற்கொள்வோர் சர்வதேச சமூகம் தமிழர்களுக்கு சிறீலங்கா இழைத்துள்ளஅநீதிக்கு நீதி பெற்றுத்தர விரைந்து செயற்படவேண்டுமெனவும் மற்றும் நிராயுதபாணிகளாகபாதுகாப்பற்ற நிலையில் வாழும் தமிழர்களை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பும்சர்வதேச சமூகத்தினரதே என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 


Makes speech at Maaveerar Naal 2011 in DK 
Kanagaravi speech at Maaveerar Naal 2011 in DK


அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2011
டென்மார்க்

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு டென்மார்க்கில் 16 தேர்வு நிலையங்களில் 04-06-2011 ஆன இன்று நடைபெற்றது. வளர்நிலை 1 தொடக்கம் ஆண்டு 12 வரை நடைபெற்ற இத்தேர்வில் 1000 மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்கள் தோற்றியுள்ளனர். மாணவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் தேர்வு எழுதியதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.டென்மார்க்கில் இருந்துகொலண்ட் நோக்கி மனிதநேய மிதிவண்டிப்பயணம்

டென்மார்க்கில் வாழும் தமிழீழத் தமிழர்களான திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் நீதி கேட்கும் மிதிவண்டிப்பயணத்தை மே முதலாம் நாள் முற்பகல் 9:00 மணியளவில் தொடங்கியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான டென்மார்க் வாழ் தமிழீழ மக்களும், டெனிஸ் மக்களும் கலந்து கொண்டு இவர்களின் மிதிவண்டிப் பயணத்தை டென்மார்க் ஸ்ருவர் நகரின் மையப்பகுதியில் தொடக்கி வைத்தனர். மே 18ம் நாள் நெதர்லாந்து கேக் நகரைச் சென்றடையவுள்ள இவர்கள், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பின்வரும் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமது மிதிவண்டிப்பயணத்தை மேற்கொள்கின்றனர்.

1. இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதே போல நெதர்லாந்து நாட்டின் கேக் நகரில் அமைந்திருக்கும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இதைப் போன்ற விசாரணைகளை நடாத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2. சிறீலங்காவில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகால சட்டம் ஆகியவற்றை நீக்கி, வதைமுகாம்களில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அனைத்துலகம் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

3. இனப்படுகொலையை மேற்கொண்ட சிறீலங்கா அரசுமீது அனைத்துலகம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்.

4. சுயாதீன ஊடகங்கள், அனைத்துலக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தடைகளற்று இயங்க சிறீலங்கா அரசுமீது அனைத்துலகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

5. தமிழீழ மக்களின் தன்னாட்சியுரிமையை அனைத்துலகம் அங்கீகரிக்க வேண்டும்.

6. 1977 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலும்,2009-2010 ஆம் ஆண்டுகளில் புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலும் தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைப்பதற்கு அனைத்துலகம் உதவவேண்டும்

இக் கோரிக்கைகளை முன்வைத்து டென்மார்க் தமிழர் பேரவையானது 2010 ம் ஆண்டிலிருந்தே நீதிகேட்கும் போராட்டத்தை நடாத்திவருகிறது. அதன் தொடர்ச்சியாகவே போர்க்குற்ற நாளை முன்னிட்டு இன்று அனைத்துலக மக்களவைகள் இப்போராட்டத்தில் இணைந்துள்ள அதேவேளையில் இக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கையெழுத்துக்களைச் சேகரித்து அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்கப்படவுள்ள மனுவில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி
டென்மார்க் தமிழர் பேரவை

 in PDF 1.. 2 ..3


தமிழீழத் தேசத்தாய் பார்வதி அம்மாவுக்கு அஞ்சலி நிகழ்வு.


டென்மார்க் கேணிங் நகரில் தமிழீழத் தேசத்தாய் பார்வதி அம்மாவுக்கு அஞ்சலி நிகழ்வு.
26-02-2011 சனி அன்று தேசத்தாயை நினைவு கூர்ந்து வணக்க நிகழ்வு இடம்பெற்றது வணக்க நிகழ்வில் தேசத்தாயின் திருவுருவப்படத்திற்கு ஈகைச் சுடறேற்றி வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து மக்களால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டு கவிதைகளும் இரங்கலுரைகளும் தேசத்தாயின் நினைவாக இடம் பெற்றது
http://foto.tamileelam.dk/#6 

தமிழர் வாழ எங்கள் தலைவரைத் தந்த தமிழீழத் திருத்தாய்
வே. பார்வதியம்மா அவர்களுக்கு வீரவணக்க அஞ்சலி !!!
தமிழீழ விடுதலைப் புலிகள்
டென்மார்க் கிளை
21-02-2011

உங்கள் உயிர்பிரிந்து சாவைத் தழுவிய நாளான 20.02.2011 ஞாயிற்றுக்கிழமை
தமிழினத்தின் அதி உச்ச துயரம் நிறைந்த நாளாம்மா. தமிழர் சுதந்திரம் இன்றி அவலத்தோடு
வாழ்ந்தவேளை தமிழர் வாழ எங்கள் தலைவரைப் பெற்ற தாயே, தரணியில் உங்கள்
தற்கொடையால், வீரத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற
வீர மறத் தலைவரை தமிழினம் பெற்றது.

உணர்வுத் தீ மூட்டி உலகம் அதிசயிக்க எங்கள் தேசியத் தலைவரை
உங்கள் கருவறையில் சுமந்து,
அடிமைத் தமிழர் விலங்குடைய சாவுமணியடித்து,
அற்புத மனிதரை தமிழினத்தின் விடியலுக்காய்
தந்த வீரத்தாயே உங்கள் பிரிவுத் துயரால் ஆறாத்துயரில்
தமிழினம் மூழ்கிக் கிடக்கிறதது.
ஈகைத் தாயின் பாதங்களைத் தொட்டு;,
மலர் தூவி வழிபட நெஞ்சம் துடிக்கிறது, ஆனால்
எம்மால் எதையும் செய்யமுடியவில்லை. மனதைக் கல்லாக்கி
உங்கள் பிள்ளைகளோடு இணைந்து பிள்ளைகளாய்
உங்களை வணங்கி நிற்கிறோம். தமிழர் வரலாற்றை மீண்டும் அந்நியர் அறிய வைத்த
கடலடி முத்தை தந்த உங்கள் திருவுருவத்தை நெஞ்சில் நிறுத்தி,
என்றும் அழியா நினைவுப் பொக்கிசமாக மனதில் வைத்துப்
போற்றி வாழ்வோம். தமிழீழ மக்களின் துயரம் தீரும் என்ற
அசையாத நம்பிக்கையுடன், உங்கள்
இறுதி மூச்சுள்ள வரையும் தமிழீழ மக்களோடு கூடி வாழ்ந்து,
அவர்கள் படும் அல்லல் அனைத்தையும்
அனுபவித்து வாழ்ந்த தியாகத் தாயே, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்
நீங்கள் செய்த அர்ப்பணிப்புக்கள் அளப்பெரியது.
நீங்கள் நெஞ்சில் சுமந்து நெருப்பாய் வளர்த்த விடுதலைச்
சிந்தனையை தமிழினம் இறுதி மூச்சுள்ள வரையும்
மறந்து விட முடியுமா? தானைத் தலைவரைத் தந்து உலககெங்கும்
தமிழர் நாமம் ஒலிக்கச் செய்த எங்கள் உயிர்த் தாயே.
தமிழர் வரலாற்றில் மீண்டும் புதிய புறநாநூற்றை எழுத புதுமைத்
தலைவனைத் தந்த உங்கள் வீரவரலாறு
பெருமையுடன் வரலாற்றுச் சுவடிகளில் பதியப்படும்,
தமிழினமும் ஆறாத்துயரோடும்,
சுதந்திர தாகத்தோடும் உங்கள் வீரவாழ்வை நினைவுகூர்ந்து
உங்களுக்கு வீரவணக்கம் செலுத்தி நிற்கும்.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
தமிழீழ விடுதலைப் புலிகள்
டென்மார்க் கிளை


தங்கத்தலைவனின் அன்னைக்கு

அன்னை எனும் முன்றெழுத்து
அடிமனதை வருதும் ஓர் உணர்வு
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,
மாமா, மாமி, மச்சான், மச்சாள் என
எமக்கெல்லாம் பலராகி விடலாம்
ஆனால் அன்னை எனும் உறவு ஒன்றே
ஒன்றேயாய்த்தான் அமைந்ததால்
அவள் என்றும் பூசிக்கப்படுகின்றாள்.
ஆனாலும் சில அன்னையர் அருமையான
வைரங்களை உவந்தே உலகிற்கு
அளிக்கின்ற படியாலே அவ் அன்னையர்கள்,
எல்லோரிற்கும் அன்னையர் ஆகிவிடுகின்றனர்.
பார்வதி அம்மாவும் தங்கத்தலைவனை
தமிழ் தாயகத்திற்கு தந்ததால் ஆகின்றார்
தாயாக தமிழீழ மக்கட்கு.
கடைசி வரை தாயகத்தில் தானிருந்து
முள்ளிவாய்காலில் முடங்கிய இரகசியங்களை
தன் மூச்சுள்ளவரை உள்ளடக்கி,
தன் மூச்சுக்காற்றை முடித்தார் வல்வையிலே.
உனக்கெனப்பெற்றாய் நால்வரை நீயும்
உன்னருகில் யாருமில்லை இப்போது
என்றாலும், ஈழம் அல்ல முழு உலகும்
அழுகின்றது உனக்காக உளம் உருகி,
உலகத்தொலைக்காட்சிகளில் உன் உருவம்
இணையத்தளங்களில் உன் பேச்சு இன்று முழுக்க.
என்றும் வாழும் எங்கள் தலைவன் பெயர் போல்
என்றும் பேசும் உன் பெயரைத் தமிழீழம்.
விண்ணுலகில் நின்று ஆசீர்வசித்திடு
என்றும் எம் தேச விடுதலைக்கு.

நாடு கடந்த அரசின் டென்மார்க் பிரதிநிதிகள்
சுகேந்தினி நிர்மலநாதன், றெமொன் வாசிங்டன், பொன் மகேஸ்வரன்


வாங்காதே என் நிலத்தை வாழ்விழப்பா​ய்

என்னடா கொடுமையிது
என்னை அடித்துத் துரத்தி விட்டு
என்னைக் கொன்று விட்டு
என்னை முள்வேலி முகாமுக்குள் முடக்கி விட்டு
என் இன இளைஞர்களை சிறையிலிட்டு
என் இனத்தையே ஓட ஓட விரட்டி விட்டு
என் இடத்தையும் பொருளையும் அபகரித்து
என் நிலைத்தையும் மரத்தையும் கொள்ளையடித்து
என் காணிகளை வேற்று நாட்டானுக்கு விற்பது

நல்ல செயலா
நியாமான செயலா ?
மக்கள் காக்கும் அரசுச் செயலா ?

மக்களை குண்டு வீசிக் கொன்றொழித்து
இடத்தைத் திருடி,
உடைமைகளை திருடி விற்கும் அரசு
மக்கள் நல அரசா ?
என்னடா கொடுமையிது
என்னடா நியாயமிது

பயங்கரவாதத்திற்கும்
என்பொருளை எனக்குத்தா
என்று உரத்துக் கேட்பதற்கும்
வேறுபாடு தெரியாத
நாடுகள் என்ன நாடா ?
நாக்கில் நீர் ஊர அடுத்தவன் இரத்தத்தை
சுவைக்கத் துடிக்கும் அரசு என்ன அரசா ?
நெஞ்சில் ஈரமில்லையா ?

என்னை என்நாட்டில் என்வீட்டில் வாழ விடாமல்
போர் செய்து என் இடத்தை அடுத்தவனுக்கு
விறபதன் வலி எனக்கல்லவா தெரியும்

விற்பவனை விட வாங்குபவனே குற்றவாளி
நீ வாங்கும் நிலம் என்னுடையது
நீ வாங்கும் ஒவ்வொரு சதுர அடியும் நான் விளையாடியது

இன்று நான் துண்டு துண்டாக சிதறியிருக்கலர்ம்
என் நிலத்தை நீ வாங்கினால் நீயும் துண்டு துண்டாவாய்
வாங்காதே அப்படியே வாங்கினால்
எண்ணிக் கொண்டிரு நீ அங்கிருந்து
ஓட்டப்டும் நாளை

வில்லங்கம் உடைய நிலத்தை வாங்குவது
குற்றம் என்று உனக்குத் தெரியாதா
வாங்காதே என் நிலத்தை – அப்படியும்
வாங்கினால் வாழ்விழந்து வீழ்வாய் ஓருநாள்.

தமிழ்க்கனல்

.........................

சிறிலங்கா தேசியகீதம்

தமிழீழத்தில் சிறிலங்கா தேசியகீதம் சிங்களத்தில் பாடப் போகிறார்களாம். இதுக்கு வேற பாரளுமன்றத்தில் சட்டமும் நிறைவேற்றி இருக்கிறார்களாம்.அப்பதான் தமிழீழத் தேசிய கீதம் எது தமிழர்களின் தேசியக் கொடி எது என்று தமிழ் மக்களுக்கு ஞாபகம் இருக்கும்.

தமிழீழத்தின் தேசியக் கொடியும் கீதமும்

ஏறுது பார் கொடி ஏறுதுபார்
ஏறுது பார் கொடி ஏறுதுபார் - இங்கு
ஏறுது பார் கொடி ஏறுதுபார் - தமிழ்
ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி - எட்டு
திக்கிலும் மானத்தைச் சேர்த்த கொடி
காலத்தை வென்றுமே நின்ற கொடி
புலி காட்டிய பாதையில் சென்ற கொடி

ஏறுது பார் கொடி ஏறுதுபார்

செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே
வீறிடும் கொடியிது - தமிழ்
மக்களைக் காத்த நம்மான மாவீரரை
வாழ்த்திடும் கொடியிது
புலி வீரத்தின் கொடியிது
மாவீரரின் கொடியிது

எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில்
ஏறிய கொடியிது - பெரும்
சத்திய வேள்வியில் செத்தவர் மீதினில்
சாத்திய கொடியிது
தமிழ் ஈழத்தின் கொடியிது
புலி ஏந்திய கொடியிது

சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய
சாதனைக் கொடியிது - சங்கு
ஊதி முழங்கிட ஊர்மனையாவிலும்
உலவிய கொடியிது
சமதர்மத்தின் கொடியிது
எங்கள் தாயவள் கொடியிது

ஆயிரம் ஆயிரம் வீறென வேங்கைகள்
ஆக்கிய கொடியிது - பிரபாகரன்
என்றிடும் காவிய நாயகன்
போற்றிடும் கொடியிது
தமிழ் தேசத்தின் கொடியிது
எங்கள் தேசிய கொடியிது
எங்கள் தேசிய கொடியிது
எங்கள் தேசிய கொடியிது


 


வீரவணக்கம்

சிங்கள சிறைகளில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யபட்ட இசைப்பிரியா உற்பட அனைத்து போராளிகளுக்கும் எமது வீரவணக்கம். உலக வல்லரசுகளை தன் பக்கம் சாய்த்துக் கொண்டு எமது மக்கள் மீது வண் கொடுமை புரியும் சிங்கள அரசுக்கு பதில் விரைவில் கொடுப்போம். இராவணனைக் காட்டி கொடுத்த குரங்குகள் ஆட்சியில் இருக்கும் வரை பொறுமை காத்திருப்போம் பாய்வதற்கு.


எமது தேசியத் தலைவர் உண்மையில் ஒரு அரசியல் குடும்பத்தின் வாரிசு அல்ல. சிங்களவர்கள் செய்த கொடுமைகளை கண்டு மனம் பொறுக்க முடியாமல் போராட புறப்பட்ட ஒருவரே.


மாவீரர் நாள் நிகழ்ச்சி 2010 டென்மார்க்
காணோளி

 

 

தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் 2010

http://foto.tamileelam.dk/#4 

டென்மார்க் மகளிரமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட. 2ம் லெப் மாலதியின் நினைவு நிகழ்வு ஓகூஸ் நகரில் 13-11-2010 சனி அன்று நடைபெற்றது. இதில் 2ம் லெப் மாலதி மற்றும் அன்னை பூபதியின் திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தப்பட்டு அரங்கநிகழ்வுகள் ஆரம்பமாகின இவ் நிகழ்வு எழுச்சி நடனங்கள், பேச்சுக்கள், பாடல்கள் மற்றும் நாடகம் என விரிந்திருந்தது.


 

பிரான்சில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு சிலை வைப்புமனிதநேய நடைப்பயணம் டென்மார்க்

 

திரு. மகேஸ்வரன், திரு. பார்த்தீபன், திரு. மனோகரன் ஆகியோரால் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து 14-10-2010 அன்று கேர்ணிங் நகரின் நகரசபை முன்றலில் ஆரம்பித்த மனிதநேய நடைப்பயணம் 23-10-2010 அன்று டென்மார்க்கின் தலைநகரான கொப்பனேகன் நகரின் நகரசபை முன்றலில் நிறை வடைந்தது.


மனிதநேய நடைப்பயணம் 14-10-2010 அன்று பிற்பகல் 5:00 மணியளவில் ஆரம்பம்

டென்மார்க்கில் வாழும் தமிழீழத் தமிழர்களான திரு மகேஸ்வரன் பொன்னம்பலம், திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் மனிதநேய நடைப்பயணம் ஒன்றை 14-10-2010 பிற்பகல் 5:00 மணியளவில் தொடங்கியுள்ளனர்.
ம‌ேலும் வாசிக்க இங்‌க‌ே கிளிக் பண்ணுங்கள்..


புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது
>  


கலைநிகழ்வு 2010 http://foto.tamileelam.dk/#1

மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் 11-09-2010 அன்று டென்மார்க் கேர்ணிங் நகரில் கலைநிகழ்வு ஒன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் Fyn, Jylland ஆகிய மாநிலங்களில் உள்ள மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்கள் பங்குபற்றிப் பல்வேறுபட்ட நிகழ்வுகளை வழங்கினர். இங்கு பேச்சு, கவிதை, நாடகம், நாட்டியநாடகம், பரதநாட்டியம், எழுச்சி நடனம், இசைநிகழ்ச்சி போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றன. இக்கலைநிகழ்வில் நாநூறுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து பார்வையிட்டனர்.கிழே படங்களை காணலம்


கரும்புலிகள் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2010 டென்மார்க்

http://foto.tamileelam.dk/#0

ஐரோப்பிய ரீதியில் வருடம் தோறும் நடைபெறும் கரும்புலிகள் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நிகழ்வானது இம்முறை சனிக்கிழமை ( 04-06-2010 ) அன்று 19 கழகங்களின் பங்குபற்றுதலோடு சிறப்பாக நடந்தேறியது. இதில் நோர்வே, பிரான்ஸ், இலண்டன் ஆகிய நாடுகளிலிருந்து விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றி இருந்தன. நிகழ்வின் படங்களை மேலே பார்க்கலாம்.

போட்டி முடிவுகள் ..

16 வயதுக்குட்பட்டோர்

முதலாவது இடம் - v.l.v tiger
இரண்டாம் இடம் - france

17 வயதுக்கு மேற்பட்டோர்

முதலாவது இடம் . fc mojen sonerborg
இரண்டாம் இடம் - dantam – 1
மூன்றாம் இடம் . black star

 


வெளியீடுகள்...


இணையத்தளங்கள்

 

Copyright ©  www.tamileelam.dk   All rights reserved.
Best viewed with
Internet Explorer 6.x or later
contact:
admin@tamileelam.dk


சி.டி
வெளியீடுகளுக்கு

Ellam Medpathu Urithi
ஈழம் மீட்பது உறுதி

Engaal Vili
எங்கள் விழி

Kallam Thantha Thalaivar
காலம் தந்த
தலைவர்

Mullivaikkal
முள்ளிவாய்க்கால்

Puyalukku Pin Malarum Naam Desam
புயலுக்கு பின் மலரும்
எம் தேசம்

Samarkala Nayakan
சமர்கள நாயகன்

Samarkalla Nayakikal
சமர்கள நாயகிகள்

Sooriya Thesam
சூரிய தேசம்

Tamil Naaththil Tamileela Ganankkal
தமிழ் நாதத்தில்
தமிழீழ கானங்கள்

Tamilar Namaku
தமிழர் நமக்கு

Veera Thalapathikal
வீரத்தளபதிகள்

Vizha Vizha Ezhuvom
விழ விழ எழுவோம்


சோதிடம்

தமிழர் அமைப்புகள்

web counter
web counter